பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி
Published on

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று சென்னை வந்தார். அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணியளவில் சென்னை புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணியளவில் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அடையார் கடற்படை தளத்திற்கு வருகை தந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com