பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு


பயணிகள்  தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
x

இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை அலுவலகம் மூலமாக பெற முடியும்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும், பயணத்தின் போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது “இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்” (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் “இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை” (Lost & Found Office) திறந்து வைத்தார்.

இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:

மின்னஞ்சல்: LFO@cmrl.in

இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.

1 More update

Next Story