

சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் மக்களின் போக்குவரத்தில் பஸ்கள், புறநகர் ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 1 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 98 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4 லட்சத்து 1 ஆயிரத்து 607 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 52 லட்சத்து 84 ஆயிரத்து 196 பேரும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20 லட்சத்து 20 ஆயிரத்து 687 பேரும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,04,04,098 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4,01,607 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2026, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 20,20,687; Online QR – 1,56,385; Static QR 2,28,732; Whatsapp - 4,69,198; Paytm 3,09,569; ONDC – 12,47,168; PhonePe – 2,73,438; CMRL Mobile App (SVP) 1,04,251; Chennai One App – 3,10,474) பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.