அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பசுமை விருது

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பசுமை விருது
Published on

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் மியாமி நகரில் சர்வதேச பசுமை உலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 24-ந்தேதி நடந்தது. இதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. கட்டுமானம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங்களை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com