சென்னை: நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு செலவின விவரங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து, இன்று (30.12.2025) சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர், இதுவரை மேற்கொண்டப் பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு செலவின விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.
சாலைப் பழுதுகள், அதாவது சாலையில் ஏற்பட்ட நொடிகள், பேட்ச் ஒர்க் செய்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்றும் மலைப் பிரதேசங்களில் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
சாலைப் புருவங்கள் தார் சாலையின் மட்டத்தைவிட உயரமாக உள்ளதால் மழைநீர் வடிய இயலாத நிலை உள்ளது. மழைநீர் வடிய ஏதுவாக சாலை புருவங்களை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கிலோ மீட்டர் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் இல்லாத இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கற்களைவ நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பணிகளை எல்லாம் ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமைச்சரின் தொடக்க உரையை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.
இந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் ரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ரா.சந்திரசேகர், முதன்மை இயக்குநர் ரா.செல்லதுரை, தரக்கட்டுப்பாடு இயக்குநர் எம்.சரவணன், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






