

சென்னை,
முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் வரும் 2-ந்தேதி சென்னை எழும்பூரில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் அலுவலகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் எதிர்வரும் 02.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை – 08, எழும்பூர், CBCID வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 02.07.2026 ஆம் தேதி காலை 10.00 மணிக்குள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான GST தொகையை அவரவர் GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின்னர் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9952022860, 9962488150.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.