

சென்னை,
சென்னை அடுத்த செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்ட்டர் அருண் பாண்டியன். இவரது மனைவி பிரதிபா. இதில் அருண் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து, பிரதிபா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்காக அருண் பாண்டியன் பிரதிபாவின் வீட்டிற்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகியோர் சேர்ந்து அருண் பாண்டியனை கூர்மையான ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அருண் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரவீன், வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.