சென்னை: ரெயில் நிலையத்தை விட்டு 200 அடி தள்ளி நின்ற ரெயிலால் பயணிகள் அதிர்ச்சி

திரிசூலம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை,
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயில், திரிசூலம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் கூச்சலிட்டனர். இதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட ரெயில் ஓட்டுநர், சுமார் 200 அடி தூரம் தள்ளி ரெயிலை நிறுத்தினார்.
இதையடுத்து பயணிகள், அங்கிருந்து இறங்கி 200 அடி தூரம் நடந்து ரெயில் நிலையத்தை அடைந்தனர். திரிசூலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
Related Tags :
Next Story






