

சென்னை போலீஸ் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், ராயப்பேட்டை சரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் சரகத்தில் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், ஜாம்பஜார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் வருகின்றன. மேலும், தரமணி சரகத்தில், தரமணி, துரைபாக்கம் போலீஸ் நிலையங்களும், நீலங்கரை சரகத்தில், நீலங்கரை, திருவான்மியூர் போலீஸ் நிலையங்களும் வருகின்றன.
வடபழனி சரகத்தில் வடபழனி, கே.கே.நகர், வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் வருகின்றன. கோயம்பேடு சரகத்தில், கோயம்பேடு மற்றும் சி.எம்.பி.டி., போலீஸ் நிலையங்களும், புதிதாக உருவாக்கப்பட்ட விருகம்பாக்கம் சரகத்தில், விருகம்பாக்கம், மதுரவாயல் போலீஸ் நிலையங்கள் வருகின்றன.
இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.