சென்னை: சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சாப்பிடும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
சென்னை: சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைத அவர்து உறவினர்கள், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com