சென்னை: கடற்கரையில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர் கைது

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்துவிடுவேன் என காவலர் ஜோசப் மிரட்டியுள்ளார்.
சென்னை: கடற்கரையில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர் கைது
Published on

சென்னை,

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஜோசப் என்பவர், அந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாணவியின் ஆண் நண்பரை தகாத வார்த்தைகளில் திட்டி அடாவடி செயலில் காவலர் ஜோசப், தனக்கு உடனடியாக பணம் தர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவி, அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.8,000 பணத்தை எடுத்து காவலரிடம் கொடுத்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவலர் ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com