சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

புகார்கள் அனைத்தும் சென்னை பொது அஞ்சலகத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்
தபால்துறை குறைதீர்ப்பு முகாம்
Published on: 

சென்னை,

சென்னை நகர அஞ்சல் துறை சார்பில், வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 16-ம் தேதியன்று காலை 11மணியளவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை நகர அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேரடி விசாரணை

அஞ்சல் துறை சார்பில், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை 600001-ல் உள்ள பொது அஞ்சலக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், அஞ்சலக சேவை தொடர்பான தங்களது குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக தெரிவித்து தீர்வு காணலாம்.

முன்பதிவு அவசியம்

முகாமில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தலைமை அஞ்சலக அதிகாரி ஸ்வாதி மாதிரிமா, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை- 600001 என்ற முகவரிக்கு அக்டோபர் 14-ம் தேதிக்குள் தங்களது புகார்களை அனுப்பி வைக்க வேண்டும். இந்த புகார்கள் அனைத்தும் சென்னை பொது அஞ்சலகத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com