

சென்னை,
சென்னை பொது அஞ்சலகம் சார்பில், அஞ்சல் சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைதீர்ப்பு முகாம் வருகிற 2026 நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னை பாரிமுனையில் உள்ள சென்னை பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில், தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, தபால்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் வழங்கப்படும் பல்வேறு அஞ்சலக சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது ஆலோசனைகள் இருந்தால், அவைகள் குறித்து இந்த முகாமில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தாராளமாக தெரிவிக்கலாம்.
இதுதொடர்பான தங்களது புகார்களை, சி. ஸ்வாதி மதிரிமா, தலைமை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை-600001 என்ற முகவரிக்கு வருகிற 2026 நவம்பர் 4-ம் தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் அஞ்சல் சேவை சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.