சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்
தபால்துறை
Published on: 

சென்னை,

சென்னை வடக்கு தபால் துறை கோட்டம் சார்பில், வரும் டிசம்பர் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

எங்கு நடைபெறும்?

எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சென்னை மாநகர் வடக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (எண். 5, பழைய எண். 3, 4-வது தளம், எழும்பூர், சென்னை – 600 008) இந்தக் கூட்டம் நடக்கிறது. அஞ்சல் சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை கூட்டத்தின் தலைவர் நேரடியாக கேட்டு நடவடிக்கை எடுப்பார்.

பொதுமக்கள் தங்களது புகார்களை டிசம்பர் 1, 2026 அன்றோ அல்லது அதற்கு முன்போ சமர்ப்பிக்க வேண்டும்.

புகார்களில் இடம்பெற வேண்டிய விவரங்கள்:

அஞ்சல் சேவைகள் (MO, VP, பதிவு அஞ்சல், காப்பீடு, விரைவு அஞ்சல்): அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்புநர் மற்றும் பெறுபவரின் முழு முகவரி, ரசீது எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அஞ்சலகத்தின் பெயர்.

சேமிப்புத் திட்டங்கள் / அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI, RPLI): கணக்கு எண் அல்லது பாலிசி எண், வாடிக்கையாளர் பெயர் மற்றும் முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், துறை சார்ந்த ஆவணங்கள் அல்லது குறிப்புகள்.

எப்படி அனுப்புவது?

புகார்களை சாதாரண அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பலாம். அஞ்சல் உறையின் மீது 'கோட்ட அஞ்சல் குறைதீர்ப்பு - சென்னை நகர வடக்கு கோட்டம்' (Division Dak Adalat - Chennai City North Division) எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். dochennainorth@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

தனியார் கூரியர்

முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை மாநகர் வடக்கு அஞ்சல் கோட்டம், எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் வரும் புகார்கள் ஏற்கப்பட மாட்டாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

X