அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

சென்னை வந்த பிரதமர் மோடி, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்
Published on

சென்னை,

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். ஐஎன்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் மக்களை பார்த்து காரில் இருந்தபடியே கை அசைத்தார். சென்னை வந்த பிரதமர் மோடி, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com