சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைந்ததால் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்தால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பால் விற்க முன்வருவார்கள் என்றும், இதனால் ஆவின் நிறுவனம் நலிவடைய வாய்ப்புள்ளது என்றும் பால் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைந்ததால் பால் பாக்கெட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவியுள்ளது.

சென்னையில் தினமும் 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com