சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம்


சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம்
x

மழைநீரில் நடந்து சென்ற பள்ளி மாணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் கடந்த புதன்கிழமை இரவு, தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பிள்ளையை பறிகொடுத்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்களுடன் இணைந்து திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story