

சென்னை,
குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை கந்தசாமிபுரம் பகுதியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “தவெக ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்தோம். ஆனால், அவர்கள் வந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நீரில் குழிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது” என்று கூறினர்.மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.