சென்னை: சுடுகாட்டில் ரவுடி வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ரவுடியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கில் சுடுகாட்டில் விசாரணை நடத்திய போலீசார்
Published on

சென்னை,

சுடுகாட்டில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெட்டி கொலை

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை அந்த வழியே சென்றவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் வெட்டு காயங்களை பார்த்ததும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் ரவுடி சாஹூல் ஹமீது (வயது 29) என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பதை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com