சென்னை: தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி சைபர் மோசடி

சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி சைபர் மோசடி
Published on: 

சென்னை,

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சைபர் மோசடி கும்பல் ஹேக் செய்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி வரை பணம் சுருட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் கடந்த 9-ந்தேதி சைபர் மோசடி கும்பல் சட்டவிரோதமாக 24 முறை பணப் பரிவர்த்தனை செய்துள்ளது. மொத்தம் ரூ.1,03,76,860 பணம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்ட பணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X