இன்றுடன் நிறைவுபெறுகிறது சென்னை சங்கமம் கலை திருவிழா


இன்றுடன் நிறைவுபெறுகிறது சென்னை சங்கமம் கலை திருவிழா
x

கோப்புப்படம்

இந்த கலைவிழாவை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார்.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை சங்கமம் கலைத் திருவிழா, இன்றுடன் வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியவை பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. 20 இடங்களில் (15/01/2026) முதல் (18/01/2026) வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம் - அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15/01/2026 முதல் நடைபெற்று வந்த நிலையில் இன்று (18/01/2026) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது.

1 More update

Next Story