சென்னை சிபிஎஸ்இ பள்ளி 10 ஆம் வகுப்பு வினாத்தாளில் டெல்லி வன்முறை குறித்த கேள்வி

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுத் தாளின் ஒரு குறிப்பிட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Image courtesy : Reuters
Image courtesy : Reuters
Published on

சென்னை

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுத் தாளின் ஒரு குறிப்பிட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா டுவிட்டரில் வினாத்தாளின் புகைப்படத்தைப் பகிர்ந்ததை அடுத்து சமூக ஊடகங்களில் இது ஒரு விவாதத்தை தூண்டி உள்ளது.

ஐந்து மதிப்பெண் கேள்வியில், டெல்லி மீதான குடியரசு தின வன்முறையை கண்டித்து தினசரி செய்தித்தாளின் ஆசிரியருக்கு 100-120 வார்த்தைகளில் கடிதம் எழுதுமாறு அதில் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். "வெளிப்புற தூண்டுதலினால் செயல்படும் இத்தகைய வன்முறை வெறி பிடித்தவர்களைத் தடுக்க" சில நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு மாணவர்களிடம் அதில் கேட்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 11 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இரண்டாவது திருத்தத் தேர்வின் ஒரு பகுதியாக இந்த கேள்வி இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல பயனர்கள் கிருஷ்ணாவின் கருத்தோடு உடன்பட்டதோடு, கேள்வியில் சொற்களைத் தேர்ந்தெடுப்பதைக் கண்டித்தாலும், ஜனவரி 26 அன்று எதிர்ப்பாளர்கள் செங்கோட்டை, தேசியக் கொடியை இழிவுபடுத்தியதால் பலர் கேள்வியில் தவறில்லை என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com