சென்னை - செங்கோட்டை சிறப்பு ரெயில் அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நின்று செல்லும்..!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அதிராம்பட்டினத்தை இரவு 1.47 மணிக்கு சென்றடையும்.
சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வரும் 19 (நாளை), 20, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 20, 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் வாரம் இருமுறை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் கூடுதலாக அதிராம்பட்டினம், மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அதிராம்பட்டினத்தை இரவு 1.47 மணிக்கு சென்றடையும். ஒரு நிமிடம் அங்கு நிற்கும் ரெயில், இரவு 1.48 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அதேபோல், காலை 4.35 மணிக்கு மானாமதுரை வந்தடையும் ரெயில் 2 நிமிடங்கள் அங்கு நின்று, அதன்பிறகு காலை 4.37 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 9.33 மணிக்கு மானாமதுரையில் 2 நிமிடமும், நள்ளிரவு 1.04 மணிக்கு அதிராம்பட்டினத்தில் 1 நிமிடமும் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com