மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை

முக்கிய பொது போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது
மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை
Published on

சென்னை,

சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை கடற்கரை -செங்கல்பட்டு, வழித்தடங்களில் நாள்தோறும் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி (வியாழக்கிழமை) உழைப்பாளர் தினம் ஆகும். உழைப்பாளர் தினம் தேசிய விடுமுறை தினமாகும். தேசிய விடுமுறையை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் .

X

Daily Thanthi
www.dailythanthi.com