சென்னையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை; என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

சென்னையில் பெய்தது மேக வெடிப்பு மழை அல்ல, சுழற்சி காரணமாக பரவலான கனமழை என வானிலை மையம் கூறியுள்ளது.
 வானிலை மையம் விளக்கம்
Published on: 

சென்னை,

சென்னையில் அதி கனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த 2 நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை 6:00 மணிக்கு லேசான மழை துவங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. நள்ளிரவு 12:00 மணி வரையும் விடாமல் கன மழை கொட்டி தீர்த்தது.

30க்கும் மேற்பட்ட இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 361 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வட சென்னை, காஞ்சிபுரத்தில் குடியிருப்புக்குள் மழைநீர் சூழ்ந்தது. இன்று (அக்டோபர் 18) காலை 5.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

* பாரிமுனை- 361 மி.மீ

* கத்திவாக்கம்- 344 மி.மீ

* மீனம்பாக்கம்-284 மி.மீ

* சாத்தாங்காடு-260 மி.மீ

* திருவொற்றியூர்-223 மி.மீ

* எண்ணூர்- 215 மி.மீ

* கார்கில் நகர்-192 மி.மீ

* சைதாபேட்டை-170 மி.மீ

* தண்டையார்பேட்டை- 164 மி.மீ

* வடபழநி-162 மி.மீ

* கொளப்பாக்கம்-161 மி.மீ

* பேசின் பிரிட்ஜ்-154 மி.மீ

* பாரிமுனை- 361 மி.மீ

* கத்திவாக்கம்- 344 மி.மீ

* மீனம்பாக்கம்-284 மி.மீ

* சாத்தாங்காடு-260 மி.மீ

* திருவொற்றியூர்-223 மி.மீ

* எண்ணூர்- 215 மி.மீ

* கார்கில் நகர்-192 மி.மீ

* சைதாபேட்டை-170 மி.மீ

* தண்டையார்பேட்டை- 164 மி.மீ

* வடபழநி-162 மி.மீ

* கொளப்பாக்கம்-161 மி.மீ

* பேசின் பிரிட்ஜ்-154 மி.மீழ்

இந்தநிலையில், வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,

நேற்றிரவு சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை, சில இடங்களில் அதி கனமழை பெய்தது. தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மேலே நிலவிய மேலடுக்கு சுழற்சியால் கனமழை. 1 மணி நேரத்தில் சிறிய பரப்பில் 100 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்வதே மேக வெடிப்பு. காற்று ஒன்றிணைதல், அதிக ஈரப்பதம் காரணமாக ஆழமான மழை மேகங்கள் உருவாகி கனமழை பெய்தது.

.

சென்னையில் பெய்த பெருமழை மேகவெடிப்பால் அல்ல; வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே அதி கனமழைக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com