மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி
Published on

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 13-வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று மதியம் இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெரம்பலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரம்பலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த சென்னை அணிக்கு தனலட்சுமி அம்மையார் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசு தொகையை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகையை ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.யும், இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவருமான சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சுனில்குமார், அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com