சென்னை, திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 49 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 49 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Published on

தமிழக அரசுப்பணியில் 2006-ம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஹனிஷ் சாப்ரா, அஜய் யாதவ் (மூத்தவர்), ஜி.லட்சுமி பிரியா, எஸ்.ஜெயந்தி, பி.சங்கர், கே.விவேகானந்தன், ஏ.ஞானசேகரன், டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் நிர்வாக பதவி நிலை உயர்வு பெறுகின்றனர்.

2013-ம் ஆண்டு தமிழக அரசுப்பணிக்கு வந்து தற்போது மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றும் டி.பிரபுசங்கர் (கரூர்), ஏ.அருண் தம்புராஜ் (நாகை), அல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), பி.காயத்ரி கிருஷ்ணன் (திருவாரூர்), ஜெ.மேகநாத ரெட்டி (விருதுநகர்), எஸ்.வினீத் (திருப்பூர்), எஸ்.பி.அம்ரித் (நீலகிரி), ஜெ.யு.சந்திரகலா (விடுப்பில் உள்ளார்), ஷ்ரேயா பி.சிங் (நாமக்கல்), பி.ரமண சரஸ்வதி (அரியலூர்), ஜெ.விஜயாராணி (சென்னை) ஆகியோர் நிர்வாக நிலை உயர்வு பெறுகின்றனர்.

இதேபோல் தமிழக அரசுப்பணியில் 2009 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 49 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அவர்கள் தற்போதுள்ள பணி மற்றும் பதவியில் நீடித்தாலும், அடுத்ததாக பெறும் பதவிக்கான ஊதியத்தை பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com