கனமழை பாதிப்பு காரணமாக சென்னை- தூத்துக்குடி விமானங்கள் ரத்து

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை பாதிப்பு காரணமாக சென்னை- தூத்துக்குடி விமானங்கள் ரத்து
Published on

சென்னை, 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி வரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை வரை செல்லும் விமானங்கள் முழுமையாக நிரம்பின.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com