சென்னை: ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய இருவர் கைது

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை: ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய இருவர் கைது
Published on

சென்னை,

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த ரெயில் நிலையத்தில் நேற்று அபிஷேக் என்ற பயணியில் செல்போன் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அபிஷேக் உடனடியாக ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், சிடிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் செல்போனை திருடிச்சென்ற தமிழ்ச்செல்வன், வசந்தகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் திருடப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com