சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி


சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
x

சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது.

சென்னை,

கர்நாடக மாநிலம் மைசூரு ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 20608) நேற்று மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் ரெயில் நிலையம் அருகே மாலை 4.40 மணியளவில் வந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. ஊழியர்கள் கோளாறை சரி செய்த பின்னர் மாலை 5.58 மணியளவில் சென்னை நோக்கி ரெயில் புறப்பட்டது.

சில கிலோ மீட்டர் தூரமே வந்த நிலையில் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனையடுத்து மாற்று வந்தே பாரத் ரெயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு இரவு 8.15 மணியளவில் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சுமார் 4 மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

1 More update

Next Story