காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு சலுகை சென்னை குடிநீர் வாரியம் தகவல்....!!

குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல்வரி 1.25% இருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு சலுகை சென்னை குடிநீர் வாரியம் தகவல்....!!
Published on

சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

01.07.2023. முதல் பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்/ கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல்வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்,கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல்வரி மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில்  வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கோண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து 01.07.2023 முதல் 1% ஆக குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.எனவே பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல்15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்,நுகர்வோர்கள் சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வெண்டிய கட்டணங்களை இணையதளம் வாயிலாக செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும்,பகுதி அலுவலகங்கள்,பனிமனை அலுவலங்களில் வரையோலை,காசோலை மற்றும் ரொக்கமாகவும் ,தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் வரையோலையாகவும் செலுத்தலாம்.மேலும்,upi,qr குறியீடு மற்றும் pos போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே,நுகர்வோர்கள் சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வெண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்தி வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஓத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com