சென்னை என்றுமே திமுகவின் கோட்டை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை என்றுமே திமுகவின் கோட்டை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனால் இன்று காலை முதலே அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

முதல்-அமைச்சர் சென்ற இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது குழந்தைகளை தூக்கி முதல்-அமைச்சர் கொஞ்சி மகிழ்ந்தார். மேலும் மக்கள், இளம்பெண்கள் என பலரும் முதல்-அமைச்சருடன் செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்... “தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..” வெல்வோம் ஒன்றாக” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com