துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் - முதலமைச்சர் பழனிசாமி

துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் நீரை, இஸ்ரேல் நாட்டில் 7 ஏக்கருக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் நீர் மேலாண்மை குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேல் செல்ல இருக்கிறேன்.

வெளிநாட்டு பயணத்தின் மூலம் 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அதிமுக அரசு துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம். ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதின் மர்மம் என்ன?

வெளிநாடுகளில் இருந்து முதலீடு கொண்டுவந்தால் நான் பாராட்டுவேன் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார் . நீங்கள் பாராட்டவேண்டிய அவசியமில்லை ; மக்கள் பாராட்டினால் போதும்" இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com