சென்னை: செங்கல்சூளையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் செங்கல்சூளையில் தங்கி, வேலை செய்து வந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
Published on

சென்னை,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரர் மாஜி (வயது 23). இவர் ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் செங்கல்சூளையில் தங்கி, வேலை செய்து வந்தார்.

மின்சாரம் தாக்கியது:

நேற்று காலை இவர், செங்கல்சூளைக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதற்காக அங்கிருந்த மின்மோட்டார் சுவிட்ச்சை அழுத்தினார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

செங்கல்சூளை தொழிலாளி பலி:

உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெகதீஸ்வரர் மாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com