சென்னை: பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களில் 3 பேர் கைது

பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சென்னை: பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களில் 3 பேர் கைது
Published on: 

சென்னை,

சென்னையில் நேற்று இரவு பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் அதிக சத்தத்துடன், அதி வேகத்தில் சட்டவிரோதமாக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

3 பேர் கைது

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு பைக் ரேசில் ஈடுபட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு மேம்பாலத்தில் நேற்று பைக் ரேடில் ஈடுபட்டு பாலத்தில் மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் விதிகளை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com