

சென்னை,
சென்னை சென்டிரலில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா செல்லும் சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் 11 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் எண் 12840 கொண்ட சென்னை சென்டிரல் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் இன்று (அக். 29) இரவு 7 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. ஆனால், விசாகப்பட்டினம் ரெயில்வே கோட்டத்தில் ஜடுபுடி - இச்சாபுரம் பிரிவுகளுக்கு இடையே உள்ள 1052-வது பாலத்தில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால், ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 7 மணிக்குப் புறப்பட வேண்டிய ரெயில், நாளை (அக். 30) காலை 6 மணிக்குச் சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.