சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று திறப்பு

ஓராண்டுக்கு ரூ.2,500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.
அதன்படி, ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.250, 3 மாதங்களுக்கு ரூ.750, 6 மாதங்களுக்கு ரூ.1,250, ஓராண்டுக்கு ரூ.2,500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பூங்காவில் நடைபயிற்சிக்கு காலை 6.30 முதல் 8 மணிவரையும், மாலை 4.30 முதல் 6 மணி வரையும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமர்விலும் 300 பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவினுள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்படுவார்கள். மேலும், நுழைவுசீட்டு முன்பதிவு மற்றும் பிற விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story






