

திருப்பூர்
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது. திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தாமணி தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி கணேசன் போட்டியை தெடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி, மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளியின் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் போட்டிகளை நடத்தினார். கோபி கிருஷ்ணன் தலைமை நடுவராக பணியாற்றினார்.
14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ரிஸ்வான் அகமது முதலிடத்தையும், மாணவிகள் பிரிவில் சப்ரின் சாதிகா முதலிடத்தையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் ஜாவித், மாணவிகள் பிரிவில் பேபி ஷகீலா ஆகியோர் முதலிடத்தை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களுடன், காமராஜரின் வரலாற்று நூல் பரிசாக வழங்கப்பட்டது.
----