செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

கும்பகோணத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
Published on

கும்பகோணம்;

தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேருயுவகேந்திரா மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.கும்பகோணம் மகாமக குளக்கரையில் தொடங்கிய சைக்கிள் ஊர்வலத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊாவலத்தை கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்க பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன்,கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட விளையாட்டு இளையோர் அலுவலர் ஆண்டனி அதிஷ்டராஜ், நேருயுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், தஞ்சை மாவட்ட செஸ் கழக செயலாளர் சிலம்பரசன் ஆகியார் ஒருங்கிணைத்து நடத்தினர். ஊர்வலத்தில் கும்பகோணம் மகளிர் கல்லூரி, இதயா கல்லூரி, ஆடவர் கலைக்கல்லூரி, இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com