மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் திருப்பத்தூர் தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கல்லூரி சார்பில் 5-ம் ஆண்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டிக்கு திருப்பத்தூர் தாலுகா சதுரங்க கழக கவுரவ தலைவர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் பாரட்டுரை வழங்கி போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக சதுரங்க கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார், கல்லூரி முதல்வர் சசிகுமார், திருப்பத்தூர் தாலுகா சதுரங்க கழக தலைவர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com