செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இணையதளங்கள் வாயிலாக காண ஏற்பாடு

மேலும் செஸ் ஒலிம்பியாட் மொபைல் ஆப்' வாயிலாகவும் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இணையதளங்கள் வாயிலாக காண ஏற்பாடு
Published on

சென்னை,

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஒரு அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் மேஜைகளில் வைக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த போட்டிக்காக மாமல்லபுரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செஸ் ஒலிம்பியாட் தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ஆனந்த் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

chess Olympiad, live chess, http://chess24.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக போட்டிகளை காணலாம் மேலும் செஸ் ஒலிம்பியாட் மொபைல் ஆப்' வாயிலாகவும் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com