செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று சந்திப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று சந்திப்பு
Published on

சென்னை,

சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசுகின்றனர். சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அழைப்பிதழை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் வழங்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com