தமிழ்நாடு வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி....!

நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, தமிழ்நாடு வந்தடைந்தது.
தமிழ்நாடு வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி....!
Published on

கோவை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இந்த செஸ் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள்.

போட்டிக்கான செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை டெல்லியில் ஜூன் 19 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி இன்று தமிழ்நாடு வந்தடைந்தது. கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள், 5,00-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு அடுத்து சேலம் மாவட்டத்திற்கு மதியம் 1 மணியளவில் இந்த ஜோதி எடுத்து செல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com