கபடி பயிற்சியின்போது நெஞ்சு பகுதியில் படுகாயம்... விரக்தியில் வாலிபர் தற்கொலை

கபடி பயிற்சியின்போது நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட படுகாயம் சிகிச்சை அளித்து பலன் அளிக்காததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கபடி பயிற்சியின்போது நெஞ்சு பகுதியில் படுகாயம்... விரக்தியில் வாலிபர் தற்கொலை
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் சக்தி காளியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் சந்துரு. இவர் 12 -ம் வகுப்பு படித்துவிட்டு சேலத்தில் உள்ள தனியார் கபடி அகாடமியில் கபடி பயிற்சி பெற்று வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கபடி பயிற்சியில் ஈடுபட்ட போது படுகாயம் அடைந்தார்.

குறிப்பாக அவருக்கு நெஞ்சுப்பகுதியில் பலத்த அடிபட்டு இருந்தது. இதனால் அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதன்காரணமாக விரக்தி அடைந்த சந்துரு நேற்று தூக்கில் தொங்கினார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அலங்கியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com