நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
Published on

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.123-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.118 ஆக ஆனது.

முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 2 ரூபாய் குறைக்க முடிவு செய்தனர். இதையடுத்து முட்டைக்கோழி கிலோ ரூ.83 ஆக ஆனது. முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்தது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com