நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை திடீர் உயர்வு

முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக நீடித்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை திடீர் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.107 ஆக அதிகரித்து உள்ளது.

முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com