சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பட்டதாரி ஊக்கத் தொகையை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....!
Published on

அண்ணாமலை நகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத முதல் பட்டதாரி ஊக்கத் தொகையை வழங்க கோரியும், கல்விக் கட்டணத்தை குறைக்க கோரியும் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் போராட்டத்தினை அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தகவலறிந்த பல்கலைக்கழக மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை கழித்து கல்வி கட்டணத்தை மாணவர்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் 4 மணி நேரமாக நடந்துவந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com