சிதம்பரம்: கோவில் குளத்தில் புகுந்த முதலை... பக்தர்கள் அச்சம்


சிதம்பரம்: கோவில் குளத்தில் புகுந்த முதலை... பக்தர்கள் அச்சம்
x
தினத்தந்தி 3 March 2025 9:06 AM IST (Updated: 3 March 2025 12:26 PM IST)
t-max-icont-min-icon

கோவில் குளத்தில் முதலை சுற்றித் திரிவதைக் கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

கடலூர்

சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அவ்வப்போது பக்கதர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் கோவில் குளம் அருகே சென்ற போது அங்கு இருக்கும் உயிரினத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து இந்த கோவில் குளத்தில் முதலை ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதலையை லாவகமாக மீட்டனர். இந்த முதலையானது 7 அடி நீளமும் 50 கிலோ எடையும் இருந்ததாக கூறப்படுகிறது.

1 More update

Next Story