சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்

சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்
Published on

சிதம்பரம், 

சிதம்பரம் பெரியார் தெருவில் பிரசித்தி பெற்ற நர்த்தன விநாயகர் என்று அழைக்கப்படும் கூத்தாடும் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கூத்தாடும் பிள்ளையாருக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது அனந்தீஸ்வரன் கோவில் தெரு, சின்னக்கடைத்தெரு, பெரியார் தெரு வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதி உலா நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com