

சென்னை,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தை இன்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
இதை தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர்.
இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. 2008 ல் சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இது சம்பந்தமாக 20 முறை எனக்கு சம்மன் அனுப்பினர். சி.பி.ஐ.க்கு நான் விருந்தாளியாக உள்ளேன்.
ஐ.என்.எக்ஸ் . வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. முழுக்க முழுக்க யாரையோ திருப்திப்படுத்த இது போன்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம்; எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை என்று கூறினார்.